Thursday, 13 March 2008

மென் திறன்களை (soft skills) க் கேட்பது அநியாயம்!

சமீப காலமாக ஊடகங்களில் வேலைவாய்ப்புப் பற்றிய செய்திகளில் அதிகம் அடிபடும் சொல் soft skills எனப்படும் மென் திறன்கள். (இதற்கும் ஆங்கில அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆங்கிலத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர் கூட மென் திறன் போதாதவராகக் கருதப்பட முடியும்.)

சரியான முறையில் புன்னகைப்பது, ஆங்கிலத்தில் உரையாடுவது, விளக்கவுரை (presentation) தருவது, கடிதம் வரைவது என்று ஆரம்பித்து சமயோசிதமாகப் பேசுவது, உடல் மொழி, முள் கரண்டியைச் சரிவரப் பிடிப்பது வரை இதில் எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால், கல்வி இன்று ஓரளவு பரவலாக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்கள், கீழே இருக்கும் பிற்பட்டவர்கள், தலித்துகள், பெண்கள், கிராமப்புரத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் போன்றவர்களை மேலேறி வந்துவிடாமல் தடுக்க இதனை ஒரு வசதியான சாக்காகப் பயன்படுத்துகிறார்களோ என்பதுதான்.

துறை சார்ந்த விஷயங்களைக் கற்றுத்தேர்ந்த ஒருவரை, 'உன் ஆங்கில உச்சரிப்பு சரியில்லை, உனக்கு சரியாக 'டை' கட்டத் தெரியவில்லை, உன் கை குலுக்கலில் அழுத்தம் குறைவாக (அல்லது அதிகமாக) உள்ளது என்று கூறி, வாய்ப்பை மறுக்க முடியும். இது நடந்துகொண்டும் வருகிறது.

நான் கேட்கிறேன், கடிதிறன்களையே கற்றுத் தேர்ந்த ஒருவருக்கு மென் திறன்களைக் கற்றுக் கொள்வது கடினமானதா என்ன? அதற்குறிய சூழல் அவருக்கு அமைந்திருக்கவில்லை என்பதே சரி. இந்நிலையில் மென் திறன்களைக் காரணம் காட்டி, துறையறிவு பெற்ற ஒருவரைப் புறந்தள்ளுவது ஒரு நிறுவனத்தின் நலனுக்குத்தான் நாளடைவில் எதிராக முடியும்.

நான் யாரும் எந்த உபயோகமான திறனையும் கற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. அதற்கு நிறுவனங்களே வாய்ப்பளிக்கலாமே. தேவைப்பட்டால் அவ்வப்போது 'மென்திறன் பட்டறை'களை நடத்துங்கள். உடனே இன்றைய அவசர யுகத்தில் இதற்கெல்லாம் நேரமில்லை என்பார்கள். மனமில்லை என்பதே சரி.

இதுதான் சாக்கு என்று மென் திறன் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போலப் பெருகிவருகின்றன. அன்று ஆங்கிலப் பயிற்சி தருவதாகக் கூறியவர்கள் இன்று 'Soft Skills Training' என்கிறார்கள். என்ன கற்றுத் தருகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஏற்கனவே கல்லூரியில் கற்பது வேலைவாய்ப்புக்கு அதிகம் பயன் படாததால் (துறை சார்ந்தே) வெளியில் கூடுதல் பயிற்சி பெற வேண்டிய நிலை உள்ளது. அதற்கும் மேலாக ஆங்கிலப் பயிற்சி, மென் திறன் பயிற்சி என்று போய்க் கொண்டே இருக்க வேண்டிய பரிதாப நிலையில் பலரும் உள்ளனர்.

அந்தக்காலத்தில் மட்டும் பொறியாளர்கள், மேலாளர்கள், விற்பனையாளர்கள், சந்தையாளர்கள் போன்றவர்கள் இல்லையா என்ன? அவர்கள் இப்படித்தான் பயிற்சி எடுத்தார்களா அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டார்களா?

என் கருத்தை எழுதிவிட்டேன்...உங்கள் கருத்துக்கு இருக்கவே இருக்கிறது பின்னூட்டம்.

15 comments:

தமிழச்சி said...

:-)))

Voice on Wings said...

நிச்சயமாக மென்திறன்கள் வன்திறன்களை விட மதிப்பு மிக்கவையே. மேலதிகாரிக்கோ அல்லது வாடிக்கையாளருக்கோ ஒருவரைப் பற்றிய நம்பிக்கையை (/ பாதுகாப்பு உணர்வை) அளிக்க உதவுவது அவரது மென்திறன்களே. அவை இல்லாத நிலையில் அவரிடம் முக்கியமான பொறுப்புகளை ஒப்படைப்பது ஒரு riskஆகவே கருதப்படும்.

நீங்கள் கூறும் முள் கரண்டி பிடிக்கத் தெரிவது போன்றவையெல்லாம் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் தனது எண்ணங்களைத் தெளிவாகவும், எளிமையாகவும் வெளிப்படுத்த முடிவது ஒரு இன்றியமையாத குணம். நீங்கள் கூறியது போலவே சமயோசிதம் / இடம் பொருள் ஏவல் தெரிந்திருப்பது மிக முக்கியம். Listening எனப்படும் சொல்லப்பட்டதை கவனமாகக் கேட்டுக் கொள்ளும் திறன் எல்லாவற்றையும் விட இன்றியமையாதது.

கீழ்தட்டிலிருப்பவர்களுக்கு மென்திறன்களைப் பெறும் வாய்ப்புகள் குறைவு என்பது ஓரளவுக்கு உண்மைதான். இதை உணர்ந்து அவர்களும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டால், அவர்களும் சமநிலையில் போட்டியிடலாம்.

புருனோ Bruno said...

மென் திறன் என்பது ஏதோ புதியது என்பது போலவும் அது மிகப்பெரிய ரகசியம் என்பது போலவும் ஒரு மாயை எற்படுத்தப்படிகிறது உண்மைதான்.

தமிழ்நாட்டு வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தமிழ் தெரிந்தவர்களே. எனவே அவர்களுடன் தமிழில் (ஒழுங்காக) உரையாடினாலே போதும்.

ஆனால் மெந்திறன் என்றாலே ஆங்கிலம் பேசுவது என்ற ஒரு தவறான கருத்து எப்படி வந்தது என்றே தெரியவில்லை

உண்மையை சொன்னால், சில வருடங்களுக்கு முன்னர் பள்ளிகளில் மாரல் சயின்ஸ் என்று நடத்துவார்கள். அதை ஒழுங்காக படித்தால் போதும்.

//எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் தனது எண்ணங்களைத் தெளிவாகவும், எளிமையாகவும் வெளிப்படுத்த முடிவது ஒரு இன்றியமையாத குணம். நீங்கள் கூறியது போலவே சமயோசிதம் / இடம் பொருள் ஏவல் தெரிந்திருப்பது மிக முக்கியம்.//

இதற்கும் ஆங்கில அறிவிற்கும் சம்பந்தம் இல்லை. இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.

//கீழ்தட்டிலிருப்பவர்களுக்கு மென்திறன்களைப் பெறும் வாய்ப்புகள் குறைவு என்பது ஓரளவுக்கு உண்மைதான். //

???

Voice on Wings said...

புருனோ, மிகப் பெரிய ரகசியம் என்றெல்லாம் கூறவில்லை. அது அத்தியாவசியமான ஒன்று என்று மட்டுமே கூறியிருக்கிறேன்.

எந்தவொரு நிறுவனமும் ஒரு மாநிலத்தை மட்டும் இலக்காகக் கொண்டு இயங்குவதில்லை. (வேலை வாய்ப்புகள் அதிகமிருக்கக் கூடிய) பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் சர்வதேச சந்தையை நோக்கியே தங்களது வணிக முனைப்புகளைச் செய்கின்றன. அப்படியிருக்கையில் 'தமிழில் மட்டும் எனக்கு மென்திறன்கள் உள்ளன' என்று கூறிக்கொண்டு ஒருவரும் நல்ல வாய்ப்புகளைப் பெற்று விடமுடியாது. பொது மொழிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

உங்களால் புரிந்து கொள்ள முடியாத எனது வாக்கியத்தைப் பற்றி: மேலே கூறியுள்ளது போல் வேற்று மொழி அறிவு, (சர்வதேச அரங்கில்) கலாச்சார வேற்றுமைகள் பற்றிய பரிச்சியம், etiquette (இங்கிதம்?) பற்றிய புரிதல்கள், ஆகியவை, கிராமத்து அல்லது பின்தங்கிய சூழல்களிலிருந்து வருபவர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பதே நான் குறிப்பிட்டது. அது பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்குக் கொண்டு செல்வது அவர்களை சம நிலையில் போட்டியிட உதவும் என்பதே நான் தெரிவிக்க நினைத்தது. அண்மையில் ஸ்ரீமங்கை சுதாகரும் இது குறித்து எழுதியுள்ளார்.

சரவணன் said...

தமிழச்சி, voice on wings மற்றும் புரூனோ, வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

Anonymous said...

There are many japanese guys who take 10 minutes to write one sentence in English. they are doing great in international business. you are right. Indians give too much importance for english.

புருனோ said...

//There are many japanese guys who take 10 minutes to write one sentence in English. they are doing great in international business. you are right. Indians give too much importance for english.//

இது தான் நான் சொல்ல வந்தது.

ஆங்கில அறிவு (அல்லது மொழி அறிவு) என்பது மென் திறனில் ஒரு சிறிய பகுதி மட்டுமே.

மென்திறன் தேவை தான். நான் அடஹி மறுக்க வில்லை ஆனால் அதை ஆங்கில அறிவுடன், அதுவும் பேச்சு ஆங்கிலத்துடன் குழப்ப வேண்டாமே.

rravish said...

I've never heard such a polarized argument! Wrong on every point in arguing.

Just ask yourself a question: 'werent human hunting and eating raw meat hundreds of thousands of years ago?'

Plain and simple answer : CIVILIZATION.

Another way to took at it: become smarter.

Voice on Wings said...

ஜப்பானியர்களோடு நம் நிலையை ஒப்பிடும் அபத்தத்தை என்னவென்று சொல்வது? அவனது அலுவல் மொழியான ஜப்பானியத்தில் அவனும் கைதேர்ந்தவனாகத்தான் இருப்பான். நம் அலுவல் மொழி ஆங்கிலம். (அது ஏன் அப்படி, அதை மாற்ற வேண்டுமா, என்பதெல்லாம் தனி விவாதம்) அதில் ஆளுமை இருந்தால்தான் நம் சூழலில் வாய்ப்புகளைப் பெற முடியும்.

மற்றொன்று - ஜப்பானியர்களைப் போன்ற உழைப்பாளிகளைக் காண முடியாதுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். அத்தகைய உழைப்பினால்தான் அவர்களால் தொழில்நுட்பங்களில் சிகரங்களை அடைய முடிந்திருக்கிறது. நாமோ, ஒரு வேலைக்கான திறமைகளை வளர்த்துக் கொள்வதற்குக் கூட சோம்பல் பட்டுக் கொண்டு 'அநியாயம் அக்கிரமம்' என்று பிறரைக் குற்றம் கூறிக் கொண்டிருக்கிறோம். "Indians give too much importance for English" அப்படீன்னு சிரமமில்லாம ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு போகும் வகை நம்மல்லாம் :) நாம எங்க ஜப்பானியர்களுக்கு இணையா தொழில்நுட்ப வள்ர்ச்சி அடையறது (அதுவும் ஆங்கிலத்தோட உதவி இல்லாம, நம்ம மொழியிலயே)?

சரவணன் said...

நன்றி rravish. நான் எழுதியிருப்பதில் பக்கச்சார்பு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மெந்திறன்கள் வேண்டாம் என்று நான் எங்கும் கூறவில்லையே. சாதகமற்ற சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு அவற்றை யார் கற்றுக்கொடுப்பது என்பதே என் கேள்வி. பழைய சோறு சாப்பிட்டு வளர்ந்தவன் முன்னிலையில் au gratin வைக்கப்பட்டு உனக்கு இதைச் சாப்பிடத்தெரியவில்லை என்று யாராவது கூறினால் எப்படி இருக்கும், அது நியாயமா என்பதே என் கேள்வி.

பலரும் இவ்விவாதத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இடுகையை ஆதரித்தோ, எதிர்த்தோ, சமநிலை எடுத்தோ உங்கள் கருத்தை இரு வரிகளிலாவது மறுமொழியாக இடுங்கள் என்று படிப்பவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

magesh said...

good work!
thought provoking!!

நாமக்கல் சிபி said...

/நிச்சயமாக மென்திறன்கள் வன்திறன்களை விட மதிப்பு மிக்கவையே. மேலதிகாரிக்கோ அல்லது வாடிக்கையாளருக்கோ ஒருவரைப் பற்றிய நம்பிக்கையை (/ பாதுகாப்பு உணர்வை) அளிக்க உதவுவது அவரது மென்திறன்களே. அவை இல்லாத நிலையில் அவரிடம் முக்கியமான பொறுப்புகளை ஒப்படைப்பது ஒரு riskஆகவே கருதப்படும்//

மெந்திறன்கள் முக்கியம் எனில் அவற்றை ஏன் துறைசார்ந்த படிப்புகளில் ஒரு பாடமாக இணைத்து பாடத்திடம் தயாரிக்கக் கூடாது!

பட்டம் வாங்கினா வேலை உண்டுன்னு பட்டப் படிப்பு படிச்சா, அப்புறம் தனியா இதையெல்லாமும் கேட்டா எப்படி!

பட்டப் படிப்புலயே இதையும் சேர்த்துக்க வேண்டியதுதானே!

அல்லது இவைதான் முக்கியம் எனில் பட்டத்துக்கு எதுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்!

குறைந்த பட்ச படிப்பும், தொழில் சார்ந்த அனுபவமும், இப்படிப்பட்ட அதி முக்கிய(!?) மதிப்பு வாய்ந்த திறமைகளையும் வைத்தே வேலைக்கு ஆட்களை எடுக்கலாமே!

Trini said...

Good for people to know.

சரவணன் said...

நன்றி Trini.

Manikandan said...

We started giving importance to English just few years back because of British; we started giving importance to soft skills due to globalization since we need to interact with multicultural people.

But it doesn’t mean that we did have etiquette or behavior, we have learnt many things in schools and majority of Tamil literature gives all kind of theory which we need to follow to nurture our talents.

Almost we lost our character ethics and we all work towards personality ethics and try to copy others and other culture to make ourselves connected with this world. This copying and imitating others called soft skills. No one can deny that there are few valuable skills one must posses to be success in life; I would say we do have skills inherited as human being with our own cultural terms but not seasoned for global expectations.

One thing we should notice developed nations are not willing to change even their accent of English, but country like India we have no other option for our young people if they want to make more money to work in call center. How can you expect a remote village person to start speaking in American accent?

By all these means or what ever you call it as soft skills we ruin our young generations and put them in trouble to learn these entire gimmicks. Down the line we will loose our originality and this will seed paradigm change in our society which will complicate many things in life.

Even these soft skills are key parameter to decide rating and promotion in organizations, a good manager should not compare apple with orange and give ratings. We need to have inclusive society for all type of people.