Saturday, 8 March 2008

வான் சிரிப்பு (திருவள்ளுவருக்கு மன்னிப்புடன்)

அமெரிக்க வான்படை பைலட்கள் எழுதிவைத்த சில விமானக் கோளாறுகளும், அவற்றுக்குப் பராமரிப்புப் பணியாளர்கள் அளித்திருந்த பதிலும் (நிஜமானவை என்று சொல்லப்படுகிறது)

கோளாறு: 'இடப்புறம் மெயின் டயரை அநேகமாக மாற்ற வேண்டியிருக்கிறது.'
பதில்: 'இடப்புறம் மெயின் டயர் அநேகமாக மாற்றப்பட்டுவிட்டது.'

கோளாறு: 'சோதனைப் பறத்தல் ஓகே, தானியங்கித் தரையிறக்கம் மட்டும் ரொம்பக் கரடுமுரடாக உள்ளது'
பதில்: 'தானியங்கித்தரையிறக்கம் இந்த விமானத்தில் நிறுவப்படவில்லை'

கோளாறு: 'காக்பிட்டில் ஏதோ லூசாக இருக்கிறது'
பதில்: 'காக்பிட்டில் ஏதோ டைட் செய்யப்பட்டது'

கோளாறு: 'வலப்புற மெயின் லான்டிங் கியரில் திரவுக் கசிவின் அடையாளம்'
பதில்: 'அடையாளம் அகற்றப்பட்டது'

கோளாறு: 'டி.எம்.இ. ஒலி அளவு நம்ப முடியாத அளவு அதிகமாக உள்ளது'
பதில்: 'ஒலி அளவு நம்பமுடிகிற அளவிற்குக் குறைக்கப்பட்டது'

கோளாறு: 'கண்ணாடியில் செத்த பூச்சிகள் உள்ளன'
பதில்: 'உயிருள்ள பூச்சிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன'

கோளாறு: 'ஐ.எஃப்.எஃப். வேலை செய்யவில்லை'
பதில்: 'ஐ.எஃப்.எஃப். ஆஃப் செய்த நிலையில் வேலை செய்யாது'

கோளாறு: 'உராய்வு லாக்குகள் திராட்டில் லீவரை பிடித்துக்கொள்ளச் செய்கின்றன'
பதில்: 'அதுதான் அவற்றின் வேலை'

கோளாறு: 'மூன்றாவது என்ஜினைக் காணவில்லை'
பதில்: 'சிறிது தேடலுக்குப்பின் வலப்புற இறக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது'

கோளாறு: 'தானியங்கி ஓட்டி, உயரக்கட்டுப்பாடு நிலையில் 200 fpm இறக்கத்தை ஏற்படுத்துகிறது'
பதில்: 'தரையில் வைத்து இந்தக் கோளாரை சோதிக்க முடியாது'

கோளாறு: 'தானியங்கவில்லை'
பதில்: 'இப்போதுதானியங்குகிறது

நன்றி: http://elaughs.blogspot.com/2007/03/here-are-some-actual-maintenance.html

7 comments:

வரவனையான் said...

யூ மேக் மை டே !!!



:))))))))))))))))))))))))))))

சரவணன் said...

நன்றி வரவனையான். யூ மேட் மை டே டூ...என் வலையில் முதல் மறுமொழி இட்டு!

சேதுக்கரசி said...

முன்பே ஆங்கிலத்தில் படிச்சிருந்தாலும் தமிழ்ல படிக்க ஒரு சுவாரசியம்தான்..

சரவணன் said...

சேதுக்கரசி, இது தமிழ்னு ஒத்துக்கிட்டிங்களே அதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :-) உங்க முகப்போவியமா இருக்கிற கோலம் அழகாயிருக்கு. போட்டதா சுட்டதா :-) அது சரி உங்கள் 'கனத்த மௌன' விரதத்தை எப்ப முடிக்கிறதா உத்தேசம்?

சேதுக்கரசி said...

//போட்டதா சுட்டதா//

சிலபேர் இது நான் போட்ட கோலமான்னு கேட்பாங்க.. நீங்க இப்படி நேரடியா கேட்டுப்புட்டீங்களே.. too bad too bad :-( ஆனாலும் என்ன பண்றது, உண்மையை ஒத்துக்கணும்ல.. போட்டோ சுட்டதுதான் ஹிஹி. சர்வேசன் பதிவிலிருந்து, அவர் அனுமதியுடன் சுட்டது.

மௌன விரதத்தை 2007லயே முடிக்கலாமான்னுகூட தோணிச்சு ஆனா வலைப்பதிவுகள் போறபோக்கைப் பார்த்தா சகிக்கல.. வலைப்பூவில் எழுதற ஆர்வம் வரலை என்பதுதான் உண்மை.

சரவணன் said...

//வலைப்பதிவுகள் போறபோக்கைப் பார்த்தா சகிக்கல.. //

ஆமாமா. icaruprakash வேற விஷயத்தில குறிப்பிட்டிருக்கற மாதிரி 'பேசாம விஜயகாந்ந் கட்சியில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யலாமான்னு தோனுது' :-)))

உண்மைத்தமிழன் said...

சரவணன்

உண்மையாக இருந்தாலும் சரி.. இல்லாமல் இருந்தாலும் சரி.. சுவாரஸ்யமான கேள்விகளும், பதில்களும்தான்..