'பெயரிடப்படாதது' என்ற தலைப்பின் கீழ் செயல்பட்ட என் பதிவுக்கு ஒரு வழியாகப் பெயர் சூட்டிவிட்டேன். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் மலர்ந்தும் மலராத பாதி மலராக விமானம் பிடித்து ஃப்ரான்ஸ் வரை சென்று மணம் பரப்பும் மதுரை மல்லி போல என் வலைப்பதிவுகள் மணக்க வேண்டும் என்பது பெயருக்கான காரணம் என்று நீங்களே யூகித்துவிட்டதால் அதைச் சொல்லாமல் விடுகிறேன் :-)
பதிவின் பெயர் மாறிவிட்டாலும், innomado (ஸ்பானிஷ் மொழியில் பெயர் இல்லை என்று அர்த்தம்) என்ற முகவரியில் தற்போதைக்கு மாற்றமில்லை. அதே போல உருப்படியான விஷயங்களைத் தரவேண்டும் என்ற ஆவலிலும்.
சரி, இன்றைய உருப்படியான விஷயமாக இப் பொன்மொழிகளைக் கூறி முடிக்கிறேன்:
பெயரிலியாய் இருப்பதைவிட அறிவிலியாய் இரு!
அனானியாய் இருப்பதைவிட அஞ்ஞானியாய் இரு!
Friday, 14 March 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
:-)
Post a Comment