மதுரையில இப்புடி ஒரு பிரமாண்ட டிஜிட்டல் பேனர் வரப்போறது நிச்சயம்ல. அதான் இங்கனயே உருவாக்கிப் பார்த்து என்னத் தயார் படுத்திக்கிட்டேன். சும்மா சொல்லக்கூடாது - அண்ணன் இந்த கெட்டப்ல அசத்தலாவே இருக்காரு!
Monday, 9 March 2009
Sunday, 1 March 2009
தனுஷ் படத்தில் கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன்
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆடுகளம் படத்தில் கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் நடித்து வருகிறார். நார்வே வாசியான ஜெயபாலன் இதற்கென மதுரையில் தங்கியுள்ளார்.

Wednesday, 16 April 2008
பாரதி திரைப்படம் செய்திருக்கும் அநீதி!
பாரதியார்,` உலகமே மாயை, எல்லாமே மாயை` என்கிற போலியான தத்துவத்தைக் கடுமையாகச் சாடிவந்தவர். இது பற்றித் தனிக் கட்டுரையே எழுதியுள்ளார். அப்படிப்பட்ட பாரதியாருக்கு பாரதி திரைப்படத்தில், நிற்பதுவே, நடப்பதுவே... பாடலில் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலில் மூன்றாவது சரணத்தில், கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? என்ற அடிக்கு அடுத்து மீண்டும் இரண்டாவது சரணத்தில் வரும்
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ?--இந்த ஞாலமும் பொய்தானோ?
என்ற அடிகளைச் சேர்த்துப் பாடல் முடிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உண்மையில் பாரதியார் எழுதியுள்ளதைப் பார்ப்போம்.
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?--இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே--நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்--இந்தக் காட்சி நித்தியமாம்.
கடைசி இரு அடிகளைக் குறிப்பாகக் கவனிக்க. கண்ணால் காணும் உலகமே மெய், வெறும் மாயையல்ல என்று இந்தப் பாடலில் அழுத்தம் திருத்தமாகப் பறை சாற்றுகிறார் பாரதியார்.
மூன்றாவது சரணம் பாதி வெட்டப்பட்டும், நான்காவது சரணம் விடப்பட்டும் பாடல் சிதைக்கப்பட்டு, சொல்லும் கருத்துக்கு நேர் எதிராகப் பொருள்படுமாறு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பாடல் படமாக்கப்பட்ட விதத்திலும், பாரதியார் மெய் மறந்து பாட்டுப்பாடியவாறு, கட்டியிருக்கும் வேட்டி இடுப்பிலிருந்து நழுவுவதைக்கூட உணராமல் அருவியில் நீராடுவது போலக் காட்டுவது புறவுலகில் அவர் அக்கரையின்றி இருந்ததாகக் கட்டமைக்கப்படுவதை மேலும் உறுதிசெய்ய உதவுகிறது.
இப்படி ஒருவர் கூறியதை அப்பட்டமாகத் திரித்து, அடியோடு மாற்றிக் காட்டுவது முற்றிலும் நேர்மையற்ற செயல். தேர்ந்த இயக்குனரான ஞான ராஜசேகரன் இப்படிச் செய்திருப்பது அக்கிரமம்!

Monday, 17 March 2008
குழந்தைகள் கடவுளுக்கு எழுதியவை
குழந்தைகள் கடவுளுக்கு எழுதிய கடிதங்கள். கீழேயே தமிழில் தந்துள்ளேன். மழலை மொழியைச் சிதையாமல் பெயர்ப்பது கஷ்டம் என்பதால் விரும்புபவர்கள் அசலையே படித்துக்கொள்க. இந்தக் கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளத்தை வளரும்போது இழப்பதுதான் மனித வாழ்வின் மிகப் பெரிய சோகமாகப் படுகிறது. கூடவே இந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் கடவுள் என்கிற கற்பிதத்தை நம்ப வைத்திருக்க வேண்டுமா என்றும் யோசிக்கலாம்.
அன்புள்ள கடவுளுக்கு, மனிதர்களைச் சாக விட்டுவிட்டு, புதுசா செய்யறதுக்குப் பதிலா இப்ப இருக்கவங்களையே வச்சுக்கிட்டா என்ன?
ஜேன்
அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அவங்க சர்ச்சிலயே முத்தமிட்டுக்கொண்டார்கள். அது சரியா?
நீல்

அன்புள்ள கடவுளுக்கு, நான் நெனக்கிறேன், ஸ்டேப்ளர் கருவி உங்க கண்டுபிடிப்புகள்ளயே ரொம்பப் பெரிய விஷயங்கள்ல ஒன்னு.
ரூத் எம்.

அன்புள்ள கடவுளுக்கு, பைபிள் காலத்துல நெஜமாவே அப்படிதான் வினோதமாப் பேசிக்கிட்டாங்களா?
அன்புள்ள கடவுளுக்கு, மனிதர்களைச் சாக விட்டுவிட்டு, புதுசா செய்யறதுக்குப் பதிலா இப்ப இருக்கவங்களையே வச்சுக்கிட்டா என்ன?ஜேன்
அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அவங்க சர்ச்சிலயே முத்தமிட்டுக்கொண்டார்கள். அது சரியா?நீல்

அன்புள்ள கடவுளுக்கு, நான் நெனக்கிறேன், ஸ்டேப்ளர் கருவி உங்க கண்டுபிடிப்புகள்ளயே ரொம்பப் பெரிய விஷயங்கள்ல ஒன்னு.
ரூத் எம்.

அன்புள்ள கடவுளுக்கு, பைபிள் காலத்துல நெஜமாவே அப்படிதான் வினோதமாப் பேசிக்கிட்டாங்களா?
ஜெனிஃபர்

அன்புள்ள கடவுளுக்கு, நான் சிலசமயம் பிரார்த்தனை செய்யாதப்பக் கூட உங்களப் பத்தி நெனக்கிறேன்.

அன்புள்ள கடவுளுக்கு, நான் சிலசமயம் பிரார்த்தனை செய்யாதப்பக் கூட உங்களப் பத்தி நெனக்கிறேன்.
எலியட்

அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு அமெரிக்கன். ஆமா, நீங்க என்ன?

அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு அமெரிக்கன். ஆமா, நீங்க என்ன?
ராபர்ட்
அன்புள்ள கடவுளுக்கு, தம்பிப் பாப்பாவக் கொடுத்ததுக்கு நன்றி. ஆனா நான் கேட்டது நாய்க்குட்டிதான்.
அன்புள்ள கடவுளுக்கு, தம்பிப் பாப்பாவக் கொடுத்ததுக்கு நன்றி. ஆனா நான் கேட்டது நாய்க்குட்டிதான்.ஜாய்ஸ்
அன்புள்ள கடவுளுக்கு, உலகத்துல இருக்க எல்லாரையும் நேசிக்கிறது உங்களுக்கு நிச்சயம் ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கனும் சரியா? எங்க வீட்ல நாலே பேர்தான் இருக்கோம், என்னாலயே அது முடியல.
அன்புள்ள கடவுளுக்கு, உலகத்துல இருக்க எல்லாரையும் நேசிக்கிறது உங்களுக்கு நிச்சயம் ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கனும் சரியா? எங்க வீட்ல நாலே பேர்தான் இருக்கோம், என்னாலயே அது முடியல.நேன்
அன்புள்ள கடவுளுக்கு, கொஞ்சம் கிறிஸ்மஸ்கும், ஈஸ்டருக்கும் நடுவில இன்னொரு விடுமுறை தாங்களேன். இப்ப அந்தச் சமயத்துல உருப்படியா ஒன்னும் இல்ல.
அன்புள்ள கடவுளுக்கு, கொஞ்சம் கிறிஸ்மஸ்கும், ஈஸ்டருக்கும் நடுவில இன்னொரு விடுமுறை தாங்களேன். இப்ப அந்தச் சமயத்துல உருப்படியா ஒன்னும் இல்ல. கின்னி

அன்புள்ள கடவுளுக்கு, வர்ர ஞாயித்துக்கிழமை சர்ச்சில என்னப் பார்த்திங்கன்னா என்னோட புது ஷூவைக் காட்டுவேன்.

அன்புள்ள கடவுளுக்கு, வர்ர ஞாயித்துக்கிழமை சர்ச்சில என்னப் பார்த்திங்கன்னா என்னோட புது ஷூவைக் காட்டுவேன்.
மிக்கி டி.

அன்புள்ள கடவுளுக்கு, நாங்க திரும்பவும் பிறந்து வருவம்னா, என்ன ஜெனிஃபர் ஹார்ட்டனா ஆக்கிடாதே. எனக்கு அவளைப் பிடிக்காது.

அன்புள்ள கடவுளுக்கு, நாங்க திரும்பவும் பிறந்து வருவம்னா, என்ன ஜெனிஃபர் ஹார்ட்டனா ஆக்கிடாதே. எனக்கு அவளைப் பிடிக்காது.
டெனிஸ்
அன்புள்ள கடவுளுக்கு, பைபிள்ல வார அந்த ஆள் மாதிரி நானும் 900 வருஷம் வாழனும்.
அன்புள்ள கடவுளுக்கு, அலாவுதீன் மாதிரி எனக்கும் மந்திர விளக்கைக் குடுத்திங்கன்னா, நான் உங்களுக்கு எது வேணும்னாலும் தருவேன், என்னோட காசையும், செஸ் செட்டையும் தவிர.
அன்புள்ள கடவுளுக்கு, பைபிள்ல வார அந்த ஆள் மாதிரி நானும் 900 வருஷம் வாழனும். க்ரிஸ்
அன்புள்ள கடவுளுக்கு, அலாவுதீன் மாதிரி எனக்கும் மந்திர விளக்கைக் குடுத்திங்கன்னா, நான் உங்களுக்கு எது வேணும்னாலும் தருவேன், என்னோட காசையும், செஸ் செட்டையும் தவிர.ராபேல்
அன்புள்ள கடவுளுக்கு, தாமஸ் எடிசன்தான் லைட்டைக் கண்டுபுடிச்சார்னு படிச்சிருக்கோம். பைபிள் வகுப்புல நீங்க லைட்டை (ஒளியை) கண்டுபுடிச்சதா சொன்னாங்க. உங்க கண்டுபிடிப்பத்தான் அவர் திருடியிருக்கணும்.
அன்புள்ள கடவுளுக்கு, தாமஸ் எடிசன்தான் லைட்டைக் கண்டுபுடிச்சார்னு படிச்சிருக்கோம். பைபிள் வகுப்புல நீங்க லைட்டை (ஒளியை) கண்டுபுடிச்சதா சொன்னாங்க. உங்க கண்டுபிடிப்பத்தான் அவர் திருடியிருக்கணும். டோன்னா.

அன்புள்ள கடவுளுக்கு, நீங்க மட்டும் டைனசார அழியவிட்டிருக்கலேன்னா எங்களுக்கு வசிக்க நாடே இருந்திருக்காது. நல்ல காரியம் செஞ்சிங்க.
அன்புள்ள கடவுளுக்கு, இந்த வருஷம் டென்னிஸை என்னோட காம்ப்புக்கு அனுப்பிடாதிங்க.

அன்புள்ள கடவுளுக்கு, நீங்க மட்டும் டைனசார அழியவிட்டிருக்கலேன்னா எங்களுக்கு வசிக்க நாடே இருந்திருக்காது. நல்ல காரியம் செஞ்சிங்க.
ஜொனாதன்
அன்புள்ள கடவுளுக்கு, இந்த வருஷம் டென்னிஸை என்னோட காம்ப்புக்கு அனுப்பிடாதிங்க. பீட்டர்.
அன்புள்ள கடவுளுக்கு, கெயினுக்கும், ஏபெலுக்கும் தனித்தனி அறை இருந்திருந்தா அவங்க ஒருத்தர ஒருத்தர் கொல்ற அளவுக்குப் போயிருக்க மாட்டாங்க. நானும், தம்பியும் அப்படித்தான் சண்டை போடாம இருக்கோம்.
அன்புள்ள கடவுளுக்கு, கெயினுக்கும், ஏபெலுக்கும் தனித்தனி அறை இருந்திருந்தா அவங்க ஒருத்தர ஒருத்தர் கொல்ற அளவுக்குப் போயிருக்க மாட்டாங்க. நானும், தம்பியும் அப்படித்தான் சண்டை போடாம இருக்கோம். லேரி
இப்ப உங்கள் முறை: உங்கள் கருத்துகளை மறுமொழியாக!
Subscribe to:
Posts (Atom)