Friday 7 March 2008

ரூ. 60,000 கோடியில் பாதியை உடனே பெற ஒரு வழி

இந்த பட்ஜெட்டில் விவசாயக் கடன்கள் ரூ. 60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தெரிந்த விஷயம். அதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று பலர் கேட்கின்றனர். அதில் பாதிக்கு மேற்பட்ட தொகையை அரசு எளிதாகப் பெற ஒரு வழி: ஐடிபிஎல் (பதிவர் டோண்டு சமீபத்தில் வேலை செய்த இடம்) நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை விற்பது. முசாபர்பூர், சென்னை, புவனேஷ்வர், கர்காவன், ஹைதராபாத் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் உள்ள இந்நிறுவனத்துக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் மதிப்பு மட்டும் ரூ. 33,000 கோடி ஆகும்! ஐடிபிஎல்-லுக்கு மேலும் 4,500 கோடி ரூபாய்களைக் கொடுத்து அதை மீட்க வேண்டும் என்ற மத்திய உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்தின் பரிந்துரையை நிதி அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. அந்தச் செலவில் 20 புதிய ஆலைகளை நிறுவ முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பிறகு என்ன? வெறுமனே இவ்வளவு சொத்தைப் போட்டு வைத்திருப்பதில் என்ன லாபம்?

ஆதாரம்: எகனாமிக் டைம்ஸ், பிப்ரவரி 14, 2008

No comments: